சனி, 6 நவம்பர், 2010

விடியல்?

ஏ சூரியனே
நீ அஸ்தம்பிக்கும்போது
நான் விழித்துக்கொள்கிறேன்
என்னவளின்
மனதைப் போல...

காதல் தோல்வி

காதல் வலையில்
நான் சூழ்ந்திருந்த போது
சொல்லாமல் சொல்லியது
இழையுதிர் காலம்
உனது காதலும்
இது போல்தானென்று...

குழந்தை தொழில்

அசுரனை கொன்ற
மகிழ்ச்சியில்
வெடி வெடித்து
சிறார்களை சிதைக்கும்
தீபாவளி

வெள்ளி, 8 அக்டோபர், 2010

மக்கள்

அரசியல்
பாம்புகளுக்கு
பால் வார்த்தவர்கள்
இன்று
அதன் சீற்றத்தின்
நடுவே
நடு நடுங்கி...

உறக்கம்

விதைகளின்
வீழ்ச்சியால்
வேர்கள் துளிர்
விட்டதைப் போல
யாருடைய வீழ்ச்சியால்
நீ தலை நிமிர
காத்துக் கொண்டிருக்கிறாய்
எந்தன்
பாரதத்தாயே??

புதன், 7 அக்டோபர், 2009

தமிழினம்

தமிழனே!

கலங்குகிறது கண்கள்

எரியுது என் உள்ளம்

கைகள் தன்னிச்சையாக

உயருகின்றன உனக்கு

உதவிகள் செய்திட - ஏன்?

உதிரங்கள் ஒன்றல்லவா

ஆனால், பி(ப)ணம் தின்னும்

சில பிசாசுகள் எல்லைகள்!

வேறு வேறு எனக்கூறி

நம்மை பிரிக்கின்றனர்

அவர்களுக்கு புரியுமா

நாளை தானும்,தம் சந்ததியும்

மரணத்தை தழுவும் என்று

மரணமே அவர்களுக்கு

உனது வரவினை உணர்த்து...

திங்கள், 12 ஜனவரி, 2009

ஒற்றுமை

பூக்களே
வாசனை நுகரவும்
கசக்கி பிழியவும்
மாதர் தம் குழலில் சூடவும்
கல்யாணம் முதல்
கருமாதி வரை
நீயே முதன்மையாயிருக்கிறாய்
வாடிய பின் தெருவில்
வீசியடிக்கப்படுகிறாய்
ஏன்?
பெண்னோடு சேர்த்து
உன்னை ஒப்பிட்டதாலா
உனக்கு இந்த அவலம்?