திங்கள், 12 ஜனவரி, 2009

ஒற்றுமை

பூக்களே
வாசனை நுகரவும்
கசக்கி பிழியவும்
மாதர் தம் குழலில் சூடவும்
கல்யாணம் முதல்
கருமாதி வரை
நீயே முதன்மையாயிருக்கிறாய்
வாடிய பின் தெருவில்
வீசியடிக்கப்படுகிறாய்
ஏன்?
பெண்னோடு சேர்த்து
உன்னை ஒப்பிட்டதாலா
உனக்கு இந்த அவலம்?
சூரியனே - நீ
அஸ்தம்பிக்கும் போது
நான் விழித்துக்கொள்கிறேன்
என்னவளின்
மனதைப்போல...

அரசியல் திருடர்கள்

ஏ சூரியனே
நீ கூட இவர்களுக்கு
பயந்துதான்
இரவு எனும்
போர்வையில் ஒளிந்து
கொள்கிறாயோ...

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

வறுமை

தலைவர் பேசப்போகிறார்
என பறை சாற்றும்
வண்ண வண்ண சுவரொட்டிகள்
ஏ அரசியல்வாதிகளே
அந்த சுவரொட்டியை
ஒட்டும் பசையையாவது
தாருங்கள் - இந்த
ஏழைகள் பசியாரட்டும்

வரம் தா

பறவைகளே
உங்களது சிறகுகளை
கொஞ்சம் தானமாக
தாருங்கள் - உலகை
சுற்றி வர ஆசை
இந்த ஏழகளுக்கு